மன்னிக்கவும்

கிரிக்கெட் ரசிகர்கள் மன்னிக்கவும்்!

எத்திசை திரும்பினாலும் 
இந்தியா வெற்றி! 
இந்தியா வெற்றி! 
என காதில் விழுகிறது.

எதில் வென்றோம் நாம்!
நம் நாட்டை பிடித்துள்ள
லஞ்ச பேயை வென்றோமா!
அறியாமை என்ற
பிசாசை வென்றோமா!
பஞ்சம் வென்றோமா!
பசியை வென்றோமா!
வெளியில் இருந்து கொண்டு
இன்றும் நம்மை
ஆண்டு வரும் 
வெள்ளயனைத்தான் 
வென்று விட்டோமா!

விளையாட்டில் ஒரு அணி மற்றொரு அணியை வென்றதற்காக இத்தனை உணர்ச்சி வசப்படும் மக்களே, 

உன் இனம் 
தீயில் 
கருகிகொண்டிருக்கும் பொழுது 
உன் உணர்ச்சிகள்
எங்கு சென்றன!

உன் இனம் 
பஞ்சம் பட்டினியால்
மடிந்து கொண்டிருக்கும் பொழுது
உன் உணர்ச்சிகள்
எங்கு சென்றன!

உன் இரத்தத்தை 
உறிஞ்சி
உனக்கே பிச்சையிடும் பொழுது
உன் உணர்ச்சிகள்
எங்கு சென்றன!

தாங்க முடியவில்லை
மனம் பதைக்கிறது
பொங்கி விட்டேன்!

மீண்டும்
கிரிக்கெட் ரசிகர்கள் மன்னிக்கவும்!

-விசா








Comments

vijibalaji said…
எதிலும்
வெல்ல முடியாத நாம்
விளையாட்டிலாவது
வென்றோம் என்று
வருந்தி மகிழ்ந்து கொள்வோம் .....!!!
Unknown said…
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" என்கிற பாரதிதாசன் பாட்டு மாதிரி நிறைய கவலைகள் ஊடே ஒரு சின்ன சந்தோசம் தான்.
Thiagarajan said…
நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் நாம் சந்தோசபட என்ன விஷயம் தான் உள்ளது
Thiagarajan said…
நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் என்ன விஷயம் தான் உள்ளது சந்தோசபட, இந்த வெற்றி பல்லாயிரம் மக்களை சந்தோசப் படவைத்ததால் சந்தோசபடுவது தவறில்லை

Popular Posts