சாலையில் ஒரு ஜோடி
சாலையில் ஒரு ஜோடி
காலையில் எழுந்து,
வீட்டின் கருமங்களை
கருத்தாய் முடித்து
பணிக்கு செல்கையில்
சாலையில் ஓர் காட்சி !
சிறிதும் பெரிதுமாய்
சாரை சாரையாய் வண்டிகள் !
சமத்துவ சின்னமாய்
சாலை முழுவதும்
பல்வேறு மனிதர்கள் !
மத்தியில் கண்டேன்
சாலையில் ஒரு ஜோடி!
உலர்ந்த உடல்
தளர்ந்த தேகம்
ஊண் தேடி தவிக்கும் விழிகள்
தானம் தேடி ஏந்திய கைகள்
தள்ளாடும் கால்கள்
சாலையோர கல் ஒன்று
சிறிதே தடுக்க
தள்ளாடுகிறார் அவர் !
உடன் தாங்கி கை பிடித்து
அவர் கை வாங்கி
தன் தோளில் வைக்கிறார் துணைவி!
இடையில் ஒருவன்,
காலத்தை வெல்லும்
திட்டம் தீட்டி,
வேகத்தை விவேகம் என்றெண்ணி
நடைபாதையில் ஊர்தியை விட,
துணைவியை அனைத்து
தூர இழுக்கிறார் அவர் !
ஏனோ இவர்கள் சாலையில் இன்று
என்றும் அறியேன் நான்!
இந்த அன்பு என்றும் நிலைக்கும்
என்று அறிவேன் நான்!
காலையில் எழுந்து,
வீட்டின் கருமங்களை
கருத்தாய் முடித்து
பணிக்கு செல்கையில்
சாலையில் ஓர் காட்சி !
சிறிதும் பெரிதுமாய்
சாரை சாரையாய் வண்டிகள் !
சமத்துவ சின்னமாய்
சாலை முழுவதும்
பல்வேறு மனிதர்கள் !
மத்தியில் கண்டேன்
சாலையில் ஒரு ஜோடி!
உலர்ந்த உடல்
தளர்ந்த தேகம்
ஊண் தேடி தவிக்கும் விழிகள்
தானம் தேடி ஏந்திய கைகள்
தள்ளாடும் கால்கள்
சாலையோர கல் ஒன்று
சிறிதே தடுக்க
தள்ளாடுகிறார் அவர் !
உடன் தாங்கி கை பிடித்து
அவர் கை வாங்கி
தன் தோளில் வைக்கிறார் துணைவி!
இடையில் ஒருவன்,
காலத்தை வெல்லும்
திட்டம் தீட்டி,
வேகத்தை விவேகம் என்றெண்ணி
நடைபாதையில் ஊர்தியை விட,
துணைவியை அனைத்து
தூர இழுக்கிறார் அவர் !
ஏனோ இவர்கள் சாலையில் இன்று
என்றும் அறியேன் நான்!
இந்த அன்பு என்றும் நிலைக்கும்
என்று அறிவேன் நான்!
Comments
Nice Anni
March 25 at 11:52pm · Like
Viji Balaji
சமூக ஏற்றத் தாழ்வில்
சமரசம் தேடும்
சிந்தனையின் செதுக்கல்
சிறப்பு
March 26 at 12:30am
Rajee Elangovan:
Very nice visa
March 26 at 1:41am