தோழி
தோழி,
உன் தோளில் கை போட்டு
தொட்டு தொட்டு பேசியது அக்காலம்
தொலைவில் அமர்ந்து, இரு
துருவங்களாய் இருப்பது இக்காலம்
உணவு வேண்டாம், உறக்கம் வேண்டாம்
உன் துணை ஒன்றே போதுமென
விடிய விடிய
கதைகள் பேசியது அக்காலம்
எத்தனை இரவுகள் விடிந்தாலும்
நினைவுகள் மட்டும் நிசமாய்
விழிகள் மூடி
உன்னை நினைத்திருப்பது இக்காலம்
எத்தனையோ நண்பர்கள்
எங்கெங்கோ இருபபினும்
எங்கள் நட்பு மட்டும்
இப்படியே வாழுமென
இறுமாப்பாய் பேசியது அக்காலம்
என்னென்ன பேசினும்
என்னென்ன நினைப்பினும்
காலச்சக்கரத்தின் சருகுகள் நாம் என்ற
உண்மை உணர்ந்தது இக்காலம்
தோழி,
வருகின்ற வருடங்களில்
வாழ்க்கை பாதையின் வழியில்
நான் எங்கெங்கு சென்றாலும்
வாழும் நாள் மட்டும்,
நம் நட்பின் வாசம்
வசந்தமாய் வாழும் என் நெஞ்சத்தில்!
உன் தோளில் கை போட்டு
தொட்டு தொட்டு பேசியது அக்காலம்
தொலைவில் அமர்ந்து, இரு
துருவங்களாய் இருப்பது இக்காலம்
உணவு வேண்டாம், உறக்கம் வேண்டாம்
உன் துணை ஒன்றே போதுமென
விடிய விடிய
கதைகள் பேசியது அக்காலம்
எத்தனை இரவுகள் விடிந்தாலும்
நினைவுகள் மட்டும் நிசமாய்
விழிகள் மூடி
உன்னை நினைத்திருப்பது இக்காலம்
எத்தனையோ நண்பர்கள்
எங்கெங்கோ இருபபினும்
எங்கள் நட்பு மட்டும்
இப்படியே வாழுமென
இறுமாப்பாய் பேசியது அக்காலம்
என்னென்ன பேசினும்
என்னென்ன நினைப்பினும்
காலச்சக்கரத்தின் சருகுகள் நாம் என்ற
உண்மை உணர்ந்தது இக்காலம்
தோழி,
வருகின்ற வருடங்களில்
வாழ்க்கை பாதையின் வழியில்
நான் எங்கெங்கு சென்றாலும்
வாழும் நாள் மட்டும்,
நம் நட்பின் வாசம்
வசந்தமாய் வாழும் என் நெஞ்சத்தில்!
Comments
அது என்ன 'Pattampoochi Pakkangal'? தமிழ்ல எழுதலாம் இல்ல?
-Remove the word verification
-Enable comment moderation. Approve each and every comment before publishing it, so that there strangers won't post some nasty comments. :)
anbe, niraya ezhuthu..
keep sending me the links also.