கலைமகள்

காணும் காட்சியாவும்
கலையாய் மின்ன,
கலைகள் யாவும்
நின் நினைவாய் ஒளிர,

கண்டு கண்டு
களிப்படையும்
கால வெள்ளந்தனில்
கரைந்து கரையும்
கரைதனைத் தேடும்
காலம்தனில்

கலைமகள் நிந்தன்
கடைக்கண் பார்வை
கிடைக்கும் இன்பத்
திருநாள் எந்நாளோ!

Comments

Popular Posts