வரம்

பற்றற்ற பண்பு
வாழ்க்கை வேண்டும்!
துன்பம் தீண்டா
திருத்தல் வேண்டும்!
நெஞ்சில் நிம்மதி
என்றும் வேண்டும்!
நின் அருள்
நித்தமும் வேண்டும்!

அன்பும் பண்பும்
அதிகமாய் வேண்டும்!
அறிவும் ஆற்றலும்
ஊற்றெடுக்க வேண்டும்!
பாவியும் பாவமும்
பறந்தோட வேண்டும்!

தேவி,
நின் அருள்
நித்தமும் வேண்டும்!

Comments

நின் கவிதை நித்தமும் வேண்டும் :)
Visa said…
இந்த கவிதை சுமார் 10 வ்ருடஙளுக்கு முன் எழுதியது. தினம் ஒரு கவிதை எழுத என் பிள்ளைகளிடம் வரம் கேட்டிருக்கின்றேன். இன்னும் வரம் கிடைத்தபாடில்லை....